மாடல் அழகிகள் ஆபாச பட விவகாரம் : பிரபல இயக்குநர் மீது குவியும் புகார்கள்

director
Last Modified வியாழன், 13 டிசம்பர் 2018 (10:17 IST)
மாடல் அழகிகளின் ஆபாச வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்ட பிரபல இயக்குநரான காஸ்டிங் மோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கூறப்பட்டிருகின்றன.
சென்னையில் பிரபல  மாடல்களில் ஆபாச படம் சென்ற வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது.அந்த வீடியோக்கள் எல்லாம் சீரியல் விளம்பரங்களுக்கு அழகிகளை தேர்வு செய்பவரின் வாட்ஸப் குரூப்பில் மூலமாக வெளியானதாக புகார் எழுந்ததுள்ளது. ஆனால் இந்த வீடியோக்களை வெளியிட்டது  அந்த குரூப்பில் உள்ள ஒரு துணைநடிகை என்றும் கூறப்படுகிறது.
 
இது குறித்து நடிகைகள் தரப்பில் கூறப்படுவதாவது:
 
எங்கள் படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்து மோகன் வீடீயோ எடுத்து  அதை எங்களுக்கு போட்டு காண்பித்து பிளாக் மெயில் செய்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மாடல் அழகிகள் கூறியுள்ளனர்.
 
இது போன்று பல அப்பாவி பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்துள்ளதாகவும் மோகன் மீது பல நடிகைகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி மோகனின் செல்போன் , லேப்டாப், உள்ளிட்ட எல்லாவற்றையும் பறிமுதல் செய்யுமாறு போலீஸாரிடம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
இந்நிலையில் நடிகைகளின் புகாரை தொடர்ந்து மோகன் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :