1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 17 ஜூன் 2017 (17:42 IST)

ரூ.71 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள போதைப் பொருட்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


 

 
சென்னையில் பல இடங்களில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் வந்ததால், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று சென்னையின் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் செங்குன்றம் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் ஆலையில் ரூ.71 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் சிக்கியது. அதில், 70 கிலோ ஹெராயின், 11 கிலோ மெத்த பெட்டமைன், 56 கிலோ சூடோ பெட்ரின் போன்ற போதைப் பொருட்களும் அடக்கம்.
 
மேலும், சென்னையின் பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், அரசு தடை விதித்துள்ள புகையிலை பொருட்கள் தமிழகத்தின் அனைத்து பெட்டிக்கடைகளிலும் சர்வ சாதரணமாக விற்பனை செய்யப்படுகிறது. இதை உட்கொள்வதால் வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகிறது. 
 
எனவே, இவை அனைத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.