1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: திங்கள், 23 நவம்பர் 2015 (17:08 IST)

ஜம்மு காஷ்மீர் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் பெண் பைலட் உட்பட 7 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புகழ்பெற்ற புனித தலமான வைஷ்ணவாதேவி கோவிலுக்கு சென்று திரும்பும் போது பக்தர்கள் 6 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற  ஹெலிகாப்டர் ஒன்று கத்ரா பகுதி அருகே விழுந்து நொறுங்கியது.


 


ஹெலிகாப்டர் கிழே விழுந்தவுடன் தீ பற்றிக்கொண்டதால் அதில் பயணம் செய்த 6 பக்தர்கள் மற்றும் ஒரு பெண் பைலட் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் ஹெலிகாப்டரில் இருந்த உடல்களை மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலியான பைலட் சுமித்ரா விஜயன் ஐதராபாத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்ததுள்ளது. இந்த ஹெலிகாப்டர் விபத்து நண்பகல் 12.30 மணியளவில் நடைபெற்றுள்ளது என்றும் தொழில்நுட்ப கோளாறால் இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஐ.ஜி தெரிவித்துள்ளார்
 
வைஷ்ணவாதேவி கோவிலுக்கு செல்லும் பக்தர்களை ஏற்றிச்செல்லும் பணியை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஹிமாலயன் ஹெலி சர்வீஸஸ் என்ற தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது