Last Updated : திங்கள், 13 மார்ச் 2017 (15:35 IST)
செந்தில் பாலாஜி ஓபிஎஸ் அணிக்கு மாறினால் எடப்பாடி அரசுக்கு சிக்கல்
இன்னும் 6 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சசிகலா அணி பெரும் அதிர்ச்சியில் உள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் தாற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பன்னீர்செல்வத்துக்கு பதில் முதல்வராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக சசிகலா அணியினர் மீது புகார் கூறினார். அப்போது பன்னீருக்கு ஆதரவாக அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவரது அணிக்கு மாறினர்.
இதையடுத்து சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதால் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில் ஓபிஎஸ் அணி அதிமுகவை கைப்பற்ற முயற்சித்து வருகிறது. தேர்தல் ஆணையம் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவித்தால். அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் ஓபிஎஸ் அணிக்கு வந்துவிடும்.
தற்போது சசிகலா அணியில் எம்.எல்.ஏ.க்கள் இரட்டை சின்னம் எந்த அணிக்கு செல்லுதோ அந்த அணிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி அம்மாவினால் நான், அம்மாவிற்காகவே நான் என்று கூட்டத்தில் பேசி வருகிறாராம். இவர் முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் என்ற முறையில் கட்சியின் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும்அழைக்கப்படுவதில்லை.
இதனால் ஒ.பன்னீர்செல்வத்தின் அணிக்கு மாறினால் பரவாயில்லை என்று கட்சி ரீதியாகவும், அவரது ஆதரவாளர்கள் சார்பிலும் ஒரு தாக்கம் ஏற்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியும், ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிக்க உள்ளதாக ஆங்காங்கே சொல்லப்பட்டு வரும் நிலையில் இவரும் சென்றால் இவரது கட்டுப்பாட்டில் உள்ள எம்.எல்.ஏ க்களும் செல்வார்கள் என்று கருதப்படுகின்றது. செந்தில் பாலாஜி ஓபிஎஸ் அணிக்கு சென்றால், எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும் பாதிப்பை சந்திக்க நெரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.