ஞாயிறு, 9 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anadhakumar
Last Updated : செவ்வாய், 11 அக்டோபர் 2016 (20:41 IST)

அம்மாவிற்காக அ.தி.மு.க வில் ரீ எண்ட்ரி கொடுத்த செந்தில் பாலாஜி

தற்காலிக முதல்வரும் வேண்டாம், துணை முதல்வரும் வேண்டாம் முதல்வர் ஜெயலலிதா தான் என்றும் தமிழக முதல்வர் என்று அவரின் அதிரடி திட்டத்தின் பின்னணியில் அவர் சொன்ன பாணியிலேயே அனைத்து அரசியல் கட்சியினரும் பேட்டி.
 


 


தமிழக முதல்வரும்., அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா, புதுச்சேரி, டெல்லி ஆகிய பகுதியிலிருந்து பல்வேறு கட்சிகளிலிருந்து மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மட்டுமில்லாமல் ஆளுநர்களும் வந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். ஆனால் அ.தி.மு.க வில் ஓரங்கட்டப்பட்ட செந்தில் பாலாஜி, தற்போது தனது முழுக்கவனத்தையும் அம்மாவின் பூரண குணமடைய பிரார்த்தனை மேற்கொண்டதோடு, முதல்வர் சிகிச்சை பெறும் அப்போலோ மருத்துவமனையை சுற்றியே வருகின்றார்.

செந்தில் பாலாஜி அம்மாவின் உடல் நலத்தை உற்றி நோக்கி வரும் நிலையில், தமிழகத்தில் தற்காலிக முதல்வர் மற்றும்  துணை முதல்வர் பெற்றி பேச்சு அடிபடும் போது ஒரு சில பிரமுகர்களிடம் அம்மா தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் இதை யாராலையும் மறுக்க முடியாதது, மேலும் அம்மா பூரண குணமடைந்து மீண்டும் அரியணையில் ஏறுவார்.

எல்லோரும் ஒருமித்த நம்பிக்கை மட்டுமில்லாது, தமிழகம் முழுவதும் உலகத்தில் உள்ள அம்மாவின் தொண்டர்கள் பல்வேறு சமயத்தை சார்ந்தவர்கள் ஒரு சேர பிரார்த்தனை செய்தால் போதும், நிச்சயம் அம்மா மீண்டும் அரியணையில் ஏறுவதோடு, எந்த நோயும் அவரை தாக்காது, இனி எந்த நோயும் அவரை அணுகாது.

ஆகவே அனைவரும் முதலில் பிரார்த்தனை செய்வோம், என்று கூறியுள்ளார். ஆனால் ஏற்கனவே அ.தி.மு.க வில் அடியோடு வேர் எடுக்கப்பட்ட செந்தில் பாலாஜி, மீண்டும் அவ்வப்போது கரூர் மாவட்ட அ.தி.மு.க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதெல்லாம் அவரது ஆதரவாளர்கள் என்று கூறி மற்ற அ.தி.மு.க வினரை கட்சி பதவியிலிருந்து பறித்து வந்த நிலையில் கடைசி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் போது, தனது உடன் பிறந்த தம்பியை கட்சி பதவியிலிருந்து அதிரடியாக தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளார் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரும், இந்திய துணை சபாநாயகருமான தம்பித்துரை இருவரும் சேர்ந்து செந்தில் பாலாஜியை அ.தி.மு.க விலிருந்து நீக்க பல்வேறு சதிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது எனது பதவி தான் போனது, எனது தம்பி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

மேலும் எனது மீது அ.தி.மு.க வின் இரு புள்ளிகளை (தம்பித்துரை, எம்.ஆர்.விஜயபாஸ்கர்) வைத்து தனது மீது ஏற்பட்ட அவமானத்தினையும் தாங்கி கொண்டு அவர்களே பொய் வழக்குகளை போடுவதையும் தெரிந்து கொண்டு, அம்மாவின் (முதல்வர் ஜெயலலிதாவின்) நலனுக்காக அ.தி.மு.க வில் ரீ எண்ட்ரி கொடுத்ததோடு, அங்கேயே இரவு பகலாக தங்கியிருக்கும் செந்தில் பாலாஜி தற்போது தமிழக அளவில் பேசப்பட்டு வருகின்றார்.