1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 27 ஜூலை 2015 (21:07 IST)

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்

அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 
தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ரோசய்யா செந்தில் பாலாஜியை நீக்கம் செய்துள்ளார்.
 
அத்துடன் செந்தில் பாலாஜியிடமிருந்து கட்சிப் பொறுப்பும் பறிக்கப்பட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தமிழக தொழில்துறை அமைச்சராகவுள்ள பி.தங்கமணிக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் | சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு நோட்டீஸ்