செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 14 ஜூன் 2023 (12:27 IST)

செந்தில் பாலாஜி கைதை கண்டித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்: கூட்டணி கட்சிகள் அறிவிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் கோவையில் நடத்தப்படும் என கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. 
 
மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வந்து சென்ற பயணமும் நோக்கமும் படுதோல்வி அடைந்ததை அடுத்து அதனை மறைப்பதற்காக செந்தில் பாலாஜி மீது நடவடிக்கையை எடுத்து இருக்கிறார்கள் என்று கூறியுள்ள கூட்டணி கட்சிகள் பாஜகவின் மக்கள் விரோத பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து கோவை சிவானந்த காலனியில் ஜூன் 16ஆம் தேதி மாலை 5 மணி அளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பாஜகவுக்கு இறுதி தோல்வியை தரும் வரையில் நமது பிரச்சாரம் தொடரும் என்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran