Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தேர்வு அறைக்கு கேமராவோடு சென்ற விவகாரம் - சர்ச்சையில் சிக்கிய செங்கோட்டையன்

Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2017 (15:14 IST)

Widgets Magazine

தேர்வு எழுதும் பள்ளி அறைகளுக்கு, புடை சூட கேமராவோடு சென்ற அமைச்சர் செங்கோட்டையன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


 

 
ஜெ. இருந்த போது, அதிமுகவில் இருந்து விலகியிருந்த செங்கோட்டையன், சசிகலா அணி அதிமுகவை கைப்பற்றிய பின், மீண்டும் அதிமுகவில் தலைகாட்டினார். சசிகலாவின் ஆதரவாளராக தன்னை காட்டிக் கொண்டார். மாஃபா பாண்டியராஜன், ஓபிஎஸ் அணிக்கு சென்ற பின், அவர் வகித்து வந்த கல்வி அமைச்சர் பதவி செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில், அடுத்தடுத்து செய்திகளில் அவர் அடிபட்டு வருகிறார். அவர் கல்வி அமைச்சராக பதவியேற்ற நாளில்,  பெண் நிருபர் ஒருவர் அவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட போது அதற்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து நழுவி சென்றார். அதை சமூகவலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்தனார்.
 
இந்நிலையில் மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கியது. இந்நிலையில் தேர்வு பணிகளை ஆய்வு செய்ய அமைச்சர் செங்கோட்டையன் சில அதிகாரிகளுடன் சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அவரோடு அனைத்து டிவி கேமரா மேன்களும் அழைத்து செல்லப்பட்டனர். 
 
தேர்வு அறைக்குள் கேமராமேன்கள் புகுந்து வீடியோ எடுப்பது, படம் எடுப்பது, தேர்வு எழுதும் மாணவியரை எழுந்து நிற்க வைத்து அமைச்சர் பேசுவது என பல காட்சிகள் வெளியே கசிந்தது. இதைக் கண்டு பல பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். தேர்வு எழுதும் அறைக்கு செங்கோட்டையன் சென்றதால், சுமார் 20 நிமிடங்கள், மாணவியர் அவதிப்பட்டிருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
 
விளம்பரம் தேடும் நோக்கத்தில் செங்கோட்டையன் செய்த செயல், தேர்வு எழுதும் மாணவியருக்கு தொந்தரவு கொடுத்துள்ளதாக பலரும் வாட்ஸ்-அப் போன்ற சமூகவலைத்தளங்களிலும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரூ.40-க்கு பதில் ரூ.4,00,000 கட்டணம் வசூலித்த சுங்க சாவடி!!

கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள டோல் பூத்தில் 40 ரூபாய்க்கு பதில் 4 லட்சம் ரூபாய் ...

news

முதலில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.. அடுத்து முதல்வர்.. - தினகரன் கனவு பலிக்குமா?

ஆர்.கே. நகர் தொகுதியில் களம் இறங்க முடிவெடுத்துள்ள தினகரன், அதற்கடுத்து முதல்வர் ...

news

கோவாவில் யாருடைய ஆட்சி? நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

கோவாவில் யார் ஆட்சி அமைப்பது என்பதற்கு தீர்வு காண நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தகோரி உச்ச ...

news

ஜாதி குறித்து கேட்ட திமுக; கொந்தளித்த ராமதாஸ்

திமுக வேட்பாளர் நேர்காணலில் திமுகவினர் ஜாதி குறித்து கேட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் ...

Widgets Magazine Widgets Magazine