செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (14:47 IST)

அதீத கொரோனா பரவல்... செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

ஜனவரி மாதம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு. 

 
கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதால் 15- 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிக்கு மாற்று நடவடிக்கை செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
 
இந்நிலையில் ஜனவரி மாதம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் மாணவர்களுக்கான விடுமுறைக்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.