1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (18:26 IST)

ஆபரேஷன் சக்ஸஸ்.. பேஷண்ட் டெத்.. தேர்தல் முடிவு குறித்து செல்லூர் ராஜூ..!

Sellur
ஈரோடு இடைத்தேர்தல் பணிகளை திமுகவினர் சிறப்பாக செய்து வந்தாலும் அவர்களுக்கு தோல்வி தான் கிடைக்கப் போகிறது என்றும் ஆபரேஷன் சக்சஸ் ஆனால் பேஷண்ட் டெத் என்ற நிலை தான் திமுகவுக்கு ஏற்படும் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருப்பதை அடுத்து நாளையுடன் நான்கு பிரச்சாரம் முடிவடை உள்ளது. இந்த நிலையில் அதிமுக திமுக பிரமுகர்கள் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர் என்பதும் வீடு வீடாக சென்று ஓட்டு பேட்டை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் முடிவு குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆபரேஷன் சக்சஸ் ஆனால் பேஷன்ட் டெத் என்பது போல தேர்தல் பணியை திமுகவினர் சிறப்பாக செய்தாலும் முடிவு கண்டிப்பாக அவர்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார். 
 
தொகுதி மக்களுக்கு ஆளும்கட்சியினர் இரவு பகல் பாராமல் அள்ளி அள்ளி கொடுக்கின்றனர் என்றும் ஆனால் முடிவு தங்களுக்கு சாதகமாக தான் வரப்போகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva