1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 18 ஜூன் 2018 (08:37 IST)

தங்கத் தமிழ்ச் செல்வனுக்கு தூண்டில் போடும் செல்லூர் ராஜூ

ராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்ள தங்கத் தமிழ் செல்வனை அதிமுக பக்கம் இழுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ தூண்டில் போட்டுள்ளார்.
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை கூறியுள்ளதால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு செல்லவுள்ளது.
 
இதுகுறித்து பேசிய தினகரன் அணி எம்.எல்.ஏ தங்கத் தமிழ்ச்ச்செல்வன் என்னுடைய தொகுதிக்கு எம்.எல்.ஏ. வேண்டும். எனவே சென்னை ஐகோர்ட்டில் நான் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறுகிறேன். அதன்பிறகு, என்னுடைய தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து ஒரு நிரந்தரமான எம்.எல்.ஏ. வரட்டும் என்று கூறினார். இதனால் தினகரன் தங்கத் தமிழ்ச் செல்வனிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதனிடையே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் எடப்பாடி தரப்பு ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ அதற்காக பணிகளை தொடங்கி விட்டார்.
 
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தங்கத் தமிழ்ச்செல்வனுக்காக அதிமுக கதவு எந்நேரமும் திறந்தே இருக்கிறது. அவர் எந்நேரமும் மீண்டும் கட்சியில் இணையலாம் எனத் தெரிவித்தார். ஆனால் நான் ஒருபோதும் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைய மாட்டேன் என தங்கத் தமிழ்ச் செல்வன் முன்னரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.