வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (15:36 IST)

சசிகலாவுக்கு ஆதரவாக பேசினேனா? செல்லூர் ராஜூ விளக்கம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் அதிமுக தொண்டர் ஒருவர் இடம் போனில் சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதாக ஆடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் இதுகுறித்து செல்லூர் ராஜு விளக்கமளித்துள்ளார் 
 
குவைத்திலிருந்து அதிமுக தொண்டர் ஒருவர் செல்லூர் ராஜூ அவர்களுடன் போனில் பேசும் ஆடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் சசிகலாவை கட்சியில் சேர்க்கும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரபூர்வமாக அவர் கட்சியில் சேருவார் என்றும் அதுவரை தொண்டர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் செல்லூர் ராஜூ கூறியுள்ளது போல் பதிவாகி உள்ளது
 
இந்த ஆடியோ இணையத்தில் வைரலான நிலையில் தன்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் யாரோ செய்த சதி தான் இந்த ஆடியோ என்றும் அதில் பேசியுள்ளது தன்னுடைய குரலை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும்  தன்னைப்போலவே பேசுவதற்கு யாரோ முயற்சி செய்திருக்கிறார்கள் என்றும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்