செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 10 ஏப்ரல் 2021 (16:29 IST)

8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு... தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு

தமிழகத்தில் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  தேர்வு நடத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவிவருகிறது. இதைத்தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவிலும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது. அதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பள்ளி ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  தேர்வு நடத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் கொரோனா பரவலால்,12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர்த்து அனைவரும் ஆல்பாஸ் என்று அறிவித்தார். விரையில் 12 ஆம் வகுப்பு மாணாவர்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அறிந்துகொள்ளும் பொருட்டு அவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வாட்ஸ் ஆப் வழியாக கேள்விகளி அனுப்பி உரிய விடைகளை எழுதி அனுப்பும்வகையில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.