தமிழிசை செளந்திரராஜன் ஆளுநர் பணியை பார்த்தால் போதும்: அமைச்சர் சேகர் பாபு
சென்னை மக்களை எப்படி மீட்டு எடுத்தோமோ அதேபோல தென்பகுதி மக்களை மீட்டெடுப்போம்' என்கிறார். சென்னையை நீங்கள் மீட்டெடுக்கவில்லை. சென்னை மக்கள் தாங்களாகவே மீண்டு எழுந்தார்கள்'' என்றார்.
சென்னை மக்களை எப்படி மீட்டு எடுத்தோமோ அதே போல் தென்மாவட்ட மக்களையும் மீட்டெடுப்போம் என்று திமுக கூறியதற்கு புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ’சென்னை மக்களை அரசு மீட்டெடுக்கவில்லை என்றும் சென்னை மக்கள் தாங்களாகவே மீண்டு எழுந்தார்கள் என்று கூறினார்.
இதுகுறித்து சேகர் அமைச்சர் சேகர்பாபு கூறியபோது ’தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் புதுவை கவர்னர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும், பாஜகவின் செய்தி தொடர்பாளராக மாற வேண்டாம். அவர்களுக்கு என்ன பணி இருக்கின்றதோ அந்த பணியை மற்றும் பார்த்தால் நல்லது.
அவருக்கு எதிர்காலத்தில் தமிழகத்தில் பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட வேண்டும் என்று ஆசை இருப்பது போல் தெரிகிறது. ஏற்கனவே அவரை தமிழக மக்கள் தோற்கடித்துள்ளார்கள், மீண்டும் போட்டியிட்டால் மீண்டும் தோற்கடிப்பார்கள், எனவே புதுவை கவர்னர் வேலையை மட்டும் அவர் பார்ப்பது நல்லது என்று கூறினார்.
Edited by Mahendran