திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 ஜூன் 2023 (12:42 IST)

சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு

சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 
 
சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்கள் சொந்த நிறுவனம் போல தீட்சதர்கள் தரப்பில் நினைக்கிறார்கள் என்றும் ஒட்டுமொத்த பக்தர்களும் கோயிலை இந்து சமய அறநிலைத்துறை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 
 
மேலும் ஆவணங்களை திரட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைப்பதற்கான பணிகள் படிப்படியாக நடைபெறும் என்றும் சிதம்பரம் கோயிலில் அதிகாரம் மையமாக தீட்சிதர்கள் செயல்படுகின்றனர் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva