1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 25 ஜனவரி 2017 (12:44 IST)

ஜல்லிக்கட்டு விவகாரம்- இப்படியும் பேசினாரா சீமான்? (வீடியோ)

ஜல்லிக்கட்டிற்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜல்லிக்கட்டு வேண்டி தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்த போது, சீமான் அவர்களுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். மேலும், கடலூர் உள்ளிட்ட சில இடங்களில் தடைகளை மீறி அவரின் கட்சியினர் ஜல்லிக்கட்டையும் நடத்தினர். தற்போது, மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற்றதாக கூறி அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், முன்பு ஒரு கூட்டத்தில் பேசிய சீமான் “ஜல்லிக்கட்டு நடத்தினால் விவசாயம் செழித்துவிடுமா?.. காளை மாடுகளை காப்பாற்றினால், பசு மாடுகள் வந்து விடுமா?.. எதுவும் நடக்காது. அப்படி கூறும் 100 பேரை கொலை செய்தால் சரியாகிவிடும்” என பேசிய வீடியோவை தற்போது எடுத்து சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவு செய்துள்ளனர்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...