திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 ஜூன் 2023 (07:52 IST)

அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி: சீமான் பாராட்டு..

தம்பி அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி என்றும் ஆனால் அதே நேரத்தில் அவர் இருக்கும் காட்சி ஊழல் அற்ற கட்சி என்று கூற முடியாது என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாகவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சீமான் அவர்களுடன் தனக்கு பல்வேறு கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டும் என்ற புள்ளியில் இருவரும் ஒன்றிணைந்துள்ளோம் என்று சமீபத்தில் அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார். 
 
இந்த நிலையில் நேற்று பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சியின் சீமான் தம்பி அண்ணாமலை நேர்மையான அதிகாரி என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லைம் ஆனால் அதே நேரத்தில் அவர் இருக்கும் கட்சியின் ஊழலற்ற கட்சி என்று சொல்ல முடியாது என்று தெரிவித்தார். 
 
தமிழகத்தில் அவர்கள் ஆட்சியில் இல்லை என்றாலும் இந்தியா முழுவதும் ஆட்சி செய்கிறார்கள் அங்கெல்லாம் ஊழல் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva