திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 மே 2021 (12:07 IST)

மின்வாரியத் தொழிலாளர்களும் முன்களப் பணியாளர்களே! – சீமான் கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்கள் பட்டியலில் மின்வாரிய தொழிலாளர்களையும் அறிவிக்க வேண்டும் என நாதக சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களையும் கொரோனா முன்கள பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து தற்போது மருத்துவ முன்கள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்வாரிய ஊழியர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ள அவர் “கொரோனா ஊரடங்கு காலத்திலும் தன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் நலப்பணிக்காக இரவு பகல் பாராது பாடுபடும் மின்வாரியத் தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்!” என கேட்டுக்கொண்டுள்ளார்.