1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (21:27 IST)

சசிகலாவுக்கு சீமான் வாழ்த்து…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சீமான் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடுகிறார். எனவே அவருக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

மொழிப்போர் வீரர், தமிழ்த்தேசிய பற்றாளர், மறைந்த பெருமதிப்பிற்குரிய ஐயா முனைவர் நடராசன் அவர்களின் துணைவியாரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு உறுதுணையாக விளங்கியவருமான மதிப்பிற்குரிய அம்மையார் சசிகலா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிப்பதில் உளம் மகிழ்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.