திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 மே 2020 (13:16 IST)

தங்கை ஜோதிமணியை திட்டியது கண்டனத்திற்குரியது! – சீமான் ஆவேசம்!

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி கனிமொழியை பாஜக பிரமுகர் கரு.நாகராஜன் அவதூறாக பேசியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி ஜோதிமணி மற்றும் பாஜகவை சேர்ந்த கரு. நாகராஜன் ஆகிய இருவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காரசாரமாக விவாதம் செய்ததால் விவாதத்தின் இடையே திடீரென ஜோதிமணி எழுந்து வெளியேறிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கரு.நாகராஜன் ஜோதிமணியை ஒருமையில் பேசியதாகவும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி அவரை அவமதித்ததாகவும் காங்கிரஸ் மற்றும்  கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எம்.பி ஜோதிமணிக்கு ஆதரவாக பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “தொலைக்காட்சி விவாதத்தில் கரூர் MP தங்கை ஜோதிமணிக்கெதிராக பாஜக கரு.நாகராஜன் தொடுத்த தனிநபர் தாக்குதலும் அருவருக்கத்தக்க அவதூறுகளும் அநாகரீகத்தின் உச்சம். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள திராணியற்று இவ்வாறு தனிநபர் தாக்குதல் மூலம் இழித்துரைத்துப் பேசுவது வன்மையான கண்டனத்திற்குரியது!” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் “பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்களை பாஜகவினர் மதிக்கிற பாங்கு இதுதானா? பாரத மாதாவின் புத்திரர்களின் 'பாரத மாதா கி ஜே' இது தானா??” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.