1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 27 ஜனவரி 2021 (08:44 IST)

விவசாயிகளை ஆதரித்து மத்திய அரசை சாடிய சீமான் !!

மத்திய அரசு வேண்டுமென்றே விவசாயிகளை பாதிக்கும் வகையிலான வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது என சீமான் கண்டனம். 

 
புதிய வேளாண்மை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் செய்து வரும் நிலையில் இன்று உச்ச கட்டமாக டிராக்டர் பேரணியை நடத்தினார்கள் என்பதும் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 
இந்நிலையில் விவசாயிகள் ஒரு சிலர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாக தெரிகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தடியடியால் அமைதி போராட்டம் கலவரமாக மாறியது. இதனிடையே நாம் தமிழர் கட்சி சீமான் இது குறித்து பேசியுள்ளார். 
 
செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சி சீமான், மத்திய அரசு வேண்டுமென்றே விவசாயிகளை பாதிக்கும் வகையிலான வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. உணர்வு மிக்க விவசாயிகளே வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். விவசாயிகள் கண்ணியமாக போராடும் போதே அழைத்துப் பேசாத அரசு இப்போது விவசாயிகள் மீது குற்றம்சாட்டுகிறது. இது விவசாயிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் எதிரான சட்டம் என வண்மையாக கண்டித்துள்ளார்.