திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (13:03 IST)

புதுச்சேரியில் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் திறப்பு - 6 நாட்களும் வகுப்புகள்!

புதுச்சேரியில் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள், இன்று முதல் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் தொடங்கியுள்ளது.

 
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஜனவரி மாதம் தொடக்கத்திலே கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக, கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் 1 முதல் 9 ஆம் வகுப்புகள் மூடப்பட்டன. தொடர்ந்து கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.
 
இந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்த்து வருவதால், 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் இன்று தொடங்கியது. வாரம் 6 நாட்கள் வகுப்புகள் முழுமையாக நடைபெறும். மாணவர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்து, அனுமதிக்கப்பட்டனர்.
 
மேலும் மாணவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருப்பதை கட்டாயமாக பின்பற்றப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் 15 வயதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இன்று முதலே பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தவும் சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.