வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 23 ஜனவரி 2021 (17:21 IST)

9 & 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி திறக்க திட்டம்! நாளை ஆலோசனை!

9 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. மாஸ்க் அணிய வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும், ஒவ்வொரு வகுப்பிலும் 25 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி உள்பட ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் பள்ளிகளுக்கு நுழையும் முன் வரை மாணவர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளி திறக்கப்பட்ட 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில் ஆங்காங்கே மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, இந்நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது. இது சம்மந்தமாக நாளை ஆலோசனை நடத்தி முதல்வரிடம் ஒப்புதல் வாங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.