1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 18 டிசம்பர் 2015 (00:10 IST)

எஸ்.சி.-எஸ்.டி உயர் கல்வித்தொகை உடனே வழங்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கோரிக்கை

எஸ்.சி., எஸ்.டி உயர் கல்வித் தொகை ரூ.1,549 கோடியை உடனே வழங்க வேண்டும் என்று, பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
 

 
இது குறித்து, முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களின் மேற்படிப்புக்காக தமிழக அரசு மத்திய அரசின் திட்டமான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
 
இந்த திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு 100 சதவீத உதவித் தொகையை வழங்கி வருகிறது. மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டில் போதுமான நிதி ஒதுக்கப்படாததால், இதுவரை இந்த பணம் தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை.
 
எனவே, இந்த திட்டத்தின் முக்கியத் துவத்தை கருத்தில் கொண்டு, சமூக நீதி அமைச்சகத்தக்கு தேவையான நிதியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
 
மேலும், உயர் கல்வி உதவித்தொகை திட்டத் துக்காக செலவு செய்த 2014-15 ஆம் ஆண்டுக்கான பாக்கித் தொகை ரூ. 1,549 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு உடனே அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.