வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2017 (11:02 IST)

தமிழக அவசர சட்டம் செல்லுமா? - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.


 

 
ஜல்லிக்கட்டு வேண்டி சென்னை, மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அந்த சட்ட வரைவு தமிழக சட்ட சபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, தற்போது ஜனாதிபதியின் ஒப்புதழையும் பெற்றுவிட்டது. விரைவில் இது தமிழக அரசின் இதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதன் பின் முறைப்படி ஜல்லிக்கட்டு சட்டம் நடைமுறைக்கு வரும்.
 
இந்நிலையில் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு எதிராக, இந்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா, கியூப்பா போன்ற அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. அதன் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் அமிதவாராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
 
விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, ஜல்லிக்கட்டிற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பதும், 2016ம் ஆண்டு அறிவிக்கு தொடர்பான தீர்ப்பு அறிவிக்க உள்ள நிலையில், மத்திய அரசு தனது அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு கூறியிருப்பதும், அரசியலைமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எனவே, இது தொடர்பான விசாரணை இன்று நடைபெறுவதால், உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு எப்படி அமையும் என்ற எதிர்ப்பு தமிழக மக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ளது.