திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2020 (14:53 IST)

சாத்தான்குளம் வழக்கு: கைதான இரு போலிஸ் கைதிகளுக்கு கொரோனா!

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 போலிஸ் கைதிகளும் மதுரை மத்திய சிறையில் உள்ள நிலையில் போலிஸ் கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இருவரும் அரசு கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டு சிகிச்சை அளிக்கவுள்ளனர். ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பு ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளதோடு சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த 6 சிபிஐ அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் வழக்கு தொடர்பாக சிபிஐ இன்று அறிக்கை தாக்கல் செய்யலாம் என ஏற்கனவே கூறியிருந்த நிலையில் அறிக்கை தாக்கல் செய்வது தாமதம் ஆகலாம் என தகவல் வெளியாகியது.