திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (20:36 IST)

கார்கேவின் வெற்றி காங்கிரசின் வெற்றி: சசி தரூர் பேட்டி

Sasitharoor
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றிபெற்ற நிலையில் கார்கே வெற்றி காங்கிரஸ் கட்சியின் வெற்றி என்று தேர்தலில் தோல்வி அடைந்த சசிதரூர் அளித்துள்ளார் 
 
இது அவர் மேலும் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் தேர்தலில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இந்த தேர்தலில் இந்திய காங்கிரஸ் கமிட்டியில் உள்ள 77% பேர் வாக்களித்துள்ளனர். சில மாநிலங்களில் 100 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அனைத்து இடங்களிலும் 90 சதவீதத்துக்கும் மேலாக வாக்குகள் பதிவாகி உள்ளது பெரிய விஷயம்
 
 எந்த ஒரு வாக்குச் சாவடியிலும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறவில்லை என்பதே ஒரு பெரிய சாதனை. உள்கட்சி ஜனநாயகம் என்றால் என்னவென்று காங்கிரஸ் கட்சியால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து பிற கட்சிகள் பாடம் கற்று கொள்ள வேண்டும்
 
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற கார்கே அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அவரது வெற்றி காங்கிரஸ் கட்சியின் வெற்றி என்று கூறியுள்ளார்
 
Edited by Mahendran