Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆளுநரை சந்திக்கும் முன் ஜெ. நினைவிடத்தில் அஞ்சலி: செண்டிமெண்ட் சசிகலா


Abimukatheesh| Last Updated: வியாழன், 9 பிப்ரவரி 2017 (18:38 IST)
ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரை சந்தித்ததை அடுத்து சசிகலா இரவு 7.30 மணி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்புக்கு முன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த மெரினா செல்கிறார்.

 


யாரை ஆட்சி அமைக்க அழைப்பது? என்பது பற்றி முடிவு செய்ய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ளார். இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வித்யாசாகர் ராவை சந்தித்தார்.

அவர்களது சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடைப்பெற்றது. இந்த சந்திப்பில் பன்னீர்செல்வம், தான் நிர்பந்தம் செய்யப்பட்டதால் ராஜினாமா செய்ததாகவும், எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக செயல்பட்டால் தனது பெரும்பான்மையை நிரூப்பிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து தற்போது 7.30 மணிக்கு சசிகலா ஆளுநரை சந்திக்க உள்ளார். அதற்கு முன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த மெரினா செல்கிறார்.

சசிகலாவின் சந்திப்பு பிறகு ஆளுநரின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தெரியவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :