Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா?: தினகரன் மீது நடவடிக்கை!

சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா?: தினகரன் மீது நடவடிக்கை!

சனி, 15 ஏப்ரல் 2017 (12:05 IST)

Widgets Magazine

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணியை சேர்ந்த சசிகலா அவரது அண்ணன் மகன் மகாதேவன் மரணமடைந்துள்ளதால் பரோலில் வெளியே வருவார் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.


 
 
சசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதனின் மூத்த மகன் மகாதேவன் இன்று காலை திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்றபோது மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். 42 வயதான இவரது மரணம் மன்னார்குடி குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பரோலில் வெளிவர வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 
ஏற்கனவே சசிகலாவின் உடல்நிலையை காரணம் காட்டி அவரை பரோலில் வெளியே கொண்டுவர வழக்கறிஞர்களுடன் ஆலோசித்ததாக தகவல்கள் வந்தது. இந்நிலையில் மகாதேவனின் இந்த திடீர் மரணத்தால் சசிகலா எளிதாக பரோலில் வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
பரோலில் வெளியே வரும் சசிகலா கட்சியிலும், குடும்பத்திலும் சில அதிரடி முடிவகளை எடுக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், குறிப்பாக தினகரனுக்கு எதிராக சசிகலா முடிவு எடுக்கலாம் என கூறப்படுகிறது. ஆர்கே நகர் தேர்தலில் சசிகலாவின் உத்தரவையும் மீறி போட்டியிட்டது, தன்னை வந்து சந்திக்க சொல்லிவிட்டும், சந்திக்காதது போன்ற காரணங்களால் சசிகலா தினகரன் மீது அதிருப்தியில் இருப்தாக கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சோதனை மேல் சோதனை ; கூவத்தூரில் தங்கிய எம்.எல்.ஏக்களிடம் அடுத்த ரெய்டு?

சில மாதங்களுக்கு முன்பு சசிகலா தரப்பினரால், கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட அதிமுக ...

news

உடலுறவில் உடைந்த ஆணுறுப்பு: ஆக்ரோஷமாக செயல்பட்டதால் பரிதாபம்!

இங்கிலாந்து நாட்டில் 42 வயதான நபர் ஒருவர் தன்னுடைய மனைவியுடன் ஆக்ரோஷமாக உடலுறவில் ...

news

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்!

அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன் இன்று காலை ...

news

நீங்க பதவி விலகினா நல்லா இருக்கும்: தினகரனை விளாசிய அமைச்சர் இவர் தான்!

அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி பன்னீர்செல்வம் வெளியே வந்தது போல தற்போது ...

Widgets Magazine Widgets Magazine