Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவிற்கு வந்த விபரீத ஆசை - முழிக்கும் சிறை அதிகாரிகள்


Murugan| Last Modified வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (12:08 IST)
சிறையில் உள்ள சசிகலாவிற்கு ஆங்கிலம் கற்க வேண்டும் என ஆசை வந்துள்ளதாம். எனவே, அவருக்கு ஆங்கில ஆசிரியர் ஒருவரை நியமிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறைத் தண்டனை பெற்ற சசிகலா தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் ஒரே அறையில் அவரது உறவினர் இளவரசியும் அடைக்கப்பட்டுள்ளார்.
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அவருடன் உலா வந்தவர் சசிகலா. ஜெயலலிதா தமிழ், ஆங்கிலம், கன்னடம் என பல மொழிகள் பேசும் திறமை உடையவர். ஆனால், சசிகலாவிற்கு ஆங்கிலம் தெரியாது.
 
இந்நிலையில், சிறையில் இருக்கும் அவருக்கு ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளது. எனவே, தனக்கு ஒரு ஆங்கில ஆசிரியரை நியமிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் அவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
 
அவரின் கோரிக்கையை ஏற்பது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :