ஜெயலலிதாவை கூண்டுக்கிளி போல அடைத்து வைத்திருந்தாரா சசிகலா?

ஜெயலலிதாவை கூண்டுக்கிளி போல அடைத்து வைத்திருந்தாரா சசிகலா?


Caston| Last Updated: சனி, 24 டிசம்பர் 2016 (12:47 IST)
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள அவரது நெருங்கிய தோழி கீதா, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

 
 
பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார் கீதா. ஜெயலலிதாவை சந்திக்க தன்னையும் சசிகலா அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவை யாரெல்லாம் நெருங்குகிறார்களோ அவர்களை எல்லாம் சசிகலா ஓரம்கட்டியே வந்தார். ஜெயலலிதாவை அவர்கள் சந்திக்க விடமாட்டார் சசிகலா என கீதா கூறினார்.
 
மேலும் சில முறை ஜெயலலிதா தன்னை போனில் தொடர்பு கொண்டதாகவும் கூறினார். அவர்களுக்கு எப்பொழுது காரியம் நடக்க வேண்டுமோ அப்போது ஜெயலலிதாவை பயன்படுத்திவிட்டு பின்னர் கூண்டுக்கிளியை போல அடைத்து வைத்து விடுவார்கள் என ஆக்ரோஷமாக கூறினார் கீதா.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :