Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி இழக்க வாய்ப்பு: அடுத்த சட்ட சிக்கல்!

சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி இழக்க வாய்ப்பு: அடுத்த சட்ட சிக்கல்!


Caston| Last Modified சனி, 11 பிப்ரவரி 2017 (13:41 IST)
தமிழகத்தில் சசிகலா முதல்வராக ஆட்சியமைக்க உரிமை கோர இருந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கி தான் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டேன் என அதிரடியாக கூறினார்.

 
 
இதனையடுத்து அதிமுக இரண்டாக பிளவுபட்டு பலரும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அவரது அணியில் சேர்ந்தனர். இதனையடுத்து தற்போது தனது கட்டுப்பாட்டில் உள்ள எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் சென்றால் முதல்வர் பதவிக்கு ஆபத்து வரும் என்பதால் அவர்களை நட்சத்திர சொகுசு விடுதியில் கண்காணிப்பில் வைத்துள்ளார்.
 
சொகுசு விடுதியில் உள்ள எம்எல்ஏக்கள் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தகவல்கள் வருகின்றன. அவர்களுக்கு பெரிய அளவிலான பணம் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுவதாக பல தகவல்கள் பரவி வருகிறது.
 
இந்நிலையில் இது அந்த எம்எல்ஏக்கள் பதவியிழக்க சட்டசிக்கலை உருவாக்கும் என கூறப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் அரசு சம்பளம் வாங்கும் ஒரு ஊழியர். அவர் மற்றவர்களிடமிருந்து சொகுசு பேருந்துப்பயணம், நட்சத்திர சொகுசு விடுதியில் தங்கும் வசதி, பணப் பரிமாற்றம் போன்றவற்றை பெற்றால் அது அரசு விதிக்கு எதிரானதாகும்.
 
முன்னதாக ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வழக்கில் இதே போன்று சொகுசு பங்களா உள்ளிட்ட வசதிகள் பெற்ற 15 எம்எல்ஏக்கள் பதவி இழந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இதனால் சசிகலா ஆதரவாக கூவத்தூர் நட்சத்திர சொகுசு விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் இதேபோன்று பதவி இழக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :