இருமுகம் காட்டும் சசிகலா: அண்ணா சமாதியில் உற்சாகம், ஜெயலலிதா சமாதியில்...?

இருமுகம் காட்டும் சசிகலா: அண்ணா சமாதியில் உற்சாகம், ஜெயலலிதா சமாதியில்...?


Caston| Last Modified வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (13:25 IST)
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து திமுக, அதிமுக கட்சிகள் அவரது சமாதிக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

 
 
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் பன்னீர்செல்வம், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை உட்பட அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இன்று அண்ணா சமாதிக்கு வந்து அவருக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
 
அண்ணா சமாதிக்கு சசிகலா வந்தபோது படு உற்சாகமாக காணப்பட்டார். முதல்வர் பன்னீர்செல்வத்தையும் அழைத்து சேர்ந்து மலர் வளையம் வைத்தார். அவரது முகம் மிகவும் உற்சாகமாக காணப்பட்டது. உடன்பிறவா சகோதரி ஜெயலலிதா இறந்த சோகத்தில் இருந்து முழுவதுமாக மீண்டு வந்துள்ளது போல் காணப்பட்டார் அவர்.
 
ஆனால் ஜெயலலிதாவின் சமாதிக்கு இன்று மரியாதை செலுத்த சென்ற போது அவர் சோக முகத்துடன் காணப்பட்டார். தன்னுடைய கண்களையும் கையில் இருந்த கர்ச்சிப்பால் துடைத்துக்கொண்ட சசிகலா ஜெயலலிதாவின் சமாதியில் உள்ள அவரது புகைப்படத்தை சோகமாக பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :