1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (19:17 IST)

சசிகலா இன்று மாலைக்குள் பெங்களூர் கோர்ட்டில் சரணடைய வேண்டும்!

சசிகலா இன்று மாலைக்குள் பெங்களூர் கோர்ட்டில் சரணடைய வேண்டும்!

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இன்று மாலைக்குள் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 
 
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறையும் 10 தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. முதலில் இவர்கள் அனைவரும் 4 வார காலத்தில் சரணடைய வேண்டும் என தகவல்கள் பரவியது.
 
ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி இவர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.
 
சிறையில் அடைக்கப்பட உள்ள இவர்களுக்கு ஜாமீன் வாய்போ, மறுசீராய்வு வாய்ப்போ இருக்காது என இந்த வழக்கில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரான பி.வி.ஆச்சார்யா தெரிவித்துள்ளார். மேலும் இவர்களுக்கு சிறையில் எந்தவித சலுகையும் அளிக்கப்பட கூடாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.