எடப்பாடி முதல்வரானால் தமிழக சிறையில் சசிகலா. சுப்பிரமணியன் சுவாமி

Sivalingam| Last Modified புதன், 15 பிப்ரவரி 2017 (23:01 IST)
பெங்களூர் சிறையில் இன்று அடைக்கப்பட்டுள்ள சசிகலா விரைவில் தமிழக சிறைக்கு மாற்றப்படுவார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


சசிகலாவின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு இன்னும் இரண்டு தினங்களில் சசிகலாவின் வழக்கறிஞர் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தால் அவர் தமிழக சிறைக்கு மாற்றப்படும் வாய்ப்பு இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

அதுமட்டுமின்றி சசிகலாவின் ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வரானால் சசிகலா தமிழக சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :