Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வேலைக்காரி முதல்வராக கூடாது; சசிகலாவை நினைத்துக்கூட பார்க்க முடியாது: ராதாரவி குசும்பு பதில்!

வேலைக்காரி முதல்வராக கூடாது; சசிகலாவை நினைத்துக்கூட பார்க்க முடியாது: ராதாரவி குசும்பு பதில்!

Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:47 IST)

Widgets Magazine

நடிகர் ஆனந்த்ராஜ் போல நடிகர் ராதாரவியும் அதிமுகவுக்கு குட்பை சொல்லிவிட்டார். அவர் தற்போது திமுக பக்கம் சாய்வது போல உள்ளது. இந்நிலையில் திமுக எம்எல்ஏவும் நடிகருமான வாகை சந்திரசேகர் குடும்ப திருமணத்துக்கு சென்ற ராதாரவி பரபரப்பு கருத்து ஒன்றை கூறியுள்ளார்.


 
 
திமுக விசுவாசியாக இருந்த ராதாரவி பின்னர் விலகி அதிமுகவில் சேர்ந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் அதிமுகவில் இருந்து விலகி திமுக பக்கம் செல்வது போல இருந்தது ஆனால் விலகாமல் அதிமுகவிலேயே தொடர்ந்தார்.
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து விலகி இருந்த ராதாரவி சசிகலாவின் தலைமையை விரும்பாமல் மீண்டும் திமுக பக்கம் செல்ல தயாராகிவிட்டார்.
 
இதனையடுத்து நடிகரும் வேளச்சேரி தொகுதி திமுக எம்எல்ஏவுமான வாகை சந்திரசேகர் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட ராதாரவி, அரசியல் குறித்த தனது முடிவை திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து விரைவில் அறிவிப்பதாக கூறினார். மேலும் ஸ்டாலினுக்கு முதல்வராகும் அனைத்து தகுதிகளும் உள்ளது என்றார்.
 
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு குசும்புடன் பதிலளித்த ராதாரவி, முதல்வர் மக்களுக்கு வேலைக்காரனா இருக்கணும். வேலைக்காரி முதல்வரா இருக்க கூடாது. அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களுடன் அரசியல் செய்த குடும்பம் என்னுடையது. சசிகலாவுடன் அரசியல் செய்வதை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அமெரிக்காவை பின்பற்றும் குவைத்: விசா வழங்க மறுப்பு!!

பாகிஸ்தான், ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாட்டு மக்களுக்கு விசா ...

news

ட்ரம்புக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு: 40 சதவீதம் உயர்வு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்து கொண்டே ...

news

அழகற்ற பெண்கள்தான் வரதட்சணைக்கு காரணம்: பள்ளி பாடநூலில் விளக்கம்

அழகற்ற ஊனமுற்ற பெண்களுக்கு திருமணம் நடைப்பெறுவது கடிணம், அவர்களால் தான் இன்றும் வரதட்சணை ...

news

ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி - நாட்டு இன மாடுகளுக்கு திடீர் மவுசு

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு, தமிழகத்தில் மீண்டும், காங்கேயம் இனம் உள்ளிட்ட நாட்டு ...

Widgets Magazine Widgets Magazine