சசிகலா தலைமையில் அதிமுக: பொதுச்செயலாளராக தீர்மானம்!

சசிகலா தலைமையில் அதிமுக: பொதுச்செயலாளராக தீர்மானம்!


Caston| Last Updated: வியாழன், 29 டிசம்பர் 2016 (15:09 IST)
மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதற்கான தீர்மானத்தை பொதுக்குழுவில் நிறைவேற்றியுள்ளனர்.

 
 
அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக இதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கிய தீர்மானமாக அதிமுக தலைமை பொறுப்பை வி.கே.சசிகலாவிடம் ஒப்படைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
சசிகலா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற பொதுக்குழுவில் அதிமுகவினர் உறுதியேற்றனர். சசிகலா பொறுப்பேற்கும் தீர்மானத்தை ராஜேந்திரபாலாஜி, குமரகுரு , ஆர்.டி.ராமச்சந்திரன், கோவிந்தராஜ் ஆகியோர் முன்மொழிந்தனர் அதன் பின்னர் அனைத்து உறுப்பினர்களும் வழிமொழிந்தனர். சூழ்ச்சிகளுக்கு இடமளிக்காமல் கட்டுக்கோப்புடன் செயல்பட பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :