Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ. இருக்கும் போதே ஆட்சியை நடத்தியது சசிகலா தான்: பொன்னையன் ஓப்பன் டாக்!

ஜெ. இருக்கும் போதே ஆட்சியை நடத்தியது சசிகலா தான்: பொன்னையன் ஓப்பன் டாக்!

புதன், 4 அக்டோபர் 2017 (13:04 IST)

Widgets Magazine

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு பின்னர் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன.


 
 
சசிகலாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் எதிரான் மனநிலையில் நிர்வாகிகள் பலர் வந்துள்ளனர். ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீதே சந்தேகத்தை வைக்கின்றனர் அவர்கள். இந்நிலையில் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது அவருக்கு தெரியாமலே தமிழக அரசை சசிகலா தான் இயக்கி வந்ததாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.
 
அதிமுக செய்தி தொடர்பாளரும், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்து அமைச்சரவையில் இடம் பெற்றவருமான பொன்னையன் பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சசிகலா குறித்து பல பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.
 
அதிமுகவில் சசிகலாதான் எல்லாம் என்கிற நிலை ஏற்பட காரணம் என்ன? என பொன்னையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஜெயலலிதா ஐந்து வயது குழந்தையின் உள்ளம் கொண்டவர். தனக்கு உதவியாளராக சசிகலாவை வைத்திருந்தார். திறமைசாலியாக இருந்த சசிகலாவை தனது வீட்டுப் பணிக்காக பயன்படுத்தினார்.
 
ஆனால் தந்திரசாலியான சசிகலா எப்படியோ ஜெயலலிதாவை ஏமாற்றினார். படிப்படியாக கட்சியில் ஆதிக்கம் செலுத்தி கட்சியை கையில் எடுத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் பிராக்ஸி கவர்மெண்ட் என்ற முறையில் ஆட்சியை சசிகலா மறைமுகமாக நடத்திவந்தார். சசிகலா நினைப்பவர் தான் எம்எல்ஏ, அவர் கை காட்டுபவர் தான் அமைச்சர் என்ற நிலை உருவானது.
 
இதற்காக தந்திரமாக எப்படியோ பலர் மூலம் ஜெயலலிதாவிடம் சொல்ல வைத்து தனக்கு வேண்டிய செட்டப்பை ஆட்சி இயந்திரத்திலும் கொண்டு வந்தார் சசிகலா என தெரிவித்துள்ளார் பொன்னையன்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

டெங்கு காய்ச்சலில் பெண் மரணம் ; உடலை கைகளால் தூக்கி சென்ற அவலம்

டெங்கு காய்ச்சலில் மரணமடைந்த பெண்ணை, அவரது கணவரும், மகனும் கைகளாலேயே சுமந்து சென்ற ...

news

மதுக்கடை வேண்டும் என வலியுறுத்தி மது குடித்து போராடியவர் மரணம்

கோவை மாவட்டத்தில் மதுக்கடை திறக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் அதிக ...

news

நடராஜனுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது - பரபரப்பு தகவல்

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜனுக்கு அறுவை சிகிச்சை ...

news

சசிகலா வெளியே; தினகரன் உள்ளே: எடப்பாடியின் மாஸ்டர் பிளான்!

டிடிவி தினகரன் மீது தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் எதிராக துண்டு பிரசுரம் ...

Widgets Magazine Widgets Magazine