வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (08:26 IST)

அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் புறப்பட்ட சசிகலா: தடுத்து நிறுத்தப்படுவாரா?

அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் புறப்பட்ட சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் சற்று முன் அவர் சென்னைக்கு வருவதற்காகக் பெங்களூரில் இருந்து கிளம்பினார்.
 
பெங்களூரு தேவனஹள்ளி என்ற விடுதியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்து வருகிறார். அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்றும் அவரது காரின் பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் வரக்கூடாது என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தும் சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ள காரில் புறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இதனை அடுத்து அவர் தமிழக எல்லையில் வரும்போது தடுத்து நிறுத்தப்படுவார் என்றும்,  அதிமுக கொடியை காரில் இருந்து எடுக்க வலியுறுத்த படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா புறப்பட்டு வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிமுக தலைமையை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது