வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (15:49 IST)

டிடிவி தினகரன் தகுதி நீக்கம்: தேர்தல் ஆணையத்தை நாடினார் சசிகலா புஷ்பா!

டிடிவி தினகரன் தகுதி நீக்கம்: தேர்தல் ஆணையத்தை நாடினார் சசிகலா புஷ்பா!

ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.


 
 
ஆர்கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன் தாராளமாக பணப்பட்டுவாடா செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்தவாறே இருந்தன. இதனையடுத்து இன்று காலை முதல் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் வீடுகளில் அதிரடி சோதனையை தொடங்கியது வருமான வரித்துறை.
 
இதில் தேர்தலில் கோடிக்கணக்கான ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் டிடிவி தினகரனை ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
அதில், ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்களை வழங்குவதாக பல குற்றச்சாட்டுகள் வருகின்றன. நேரடியாக, ஓப்பனாக இவர்கள் பணப்பட்டுவாடா செய்வது நன்றாகவே எல்லாருக்கும் தெரிகிறது. அதற்கான ஆதரங்களும் வருகின்றன. இது தொடர்பாக 20 மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.


 
 
நேரடியாக, ஓப்பனாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வரும் தினகரன் வெளியூர்களில் இருந்து ஆட்களை இறக்கி வாக்காளர்களை தனக்கு வாக்களுக்குமாறு மிரட்டியும் வருகின்றனர். மேலும் காவல்துறையை பயன்படுத்தி மின்னணு வாக்குப்பதி இயந்திரத்தின் மூலம் தங்களுக்கு சாதகமாக ஏமாற்றவும் வாய்ப்பு உள்ளது.
 
எனவே நேரடியாக ஓப்பனாக பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ள டிடிவி தினகரனை உடனடியாக காலம் தாழ்த்தாமல் தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் சசிகலா புஷ்பா.