Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவை அசிங்கமாக திட்டாதீர்கள்...


bala| Last Updated: திங்கள், 13 பிப்ரவரி 2017 (18:12 IST)
விரைவில் சட்ட சபையை நான் கூட்டுவேன் -சின்னம்மா நல்லா  கூட்டிட்டு  சாவியை வாட்ச்மேன் கிட்ட குடுத்திட்டு போம்மா .இது நான் சமீபத்தில் என் சமூக வலைதள கணக்கு  மூலம் பெற்ற . சசிகலா பெயரில் கவர்னருக்கு அனுப்பிய ஒரு கடிதம் வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.அதில் சசிகலா, ஆளுநர் அழைக்கவிட்டால் இதற்கு மேல் பொறுமை இல்லை ,தற்கொலை செய்து கொள்வேன் என்பது சசிகலா சொல்வதன் பொருள்.

 

ஏன் இந்த கொலைவெறி

சசிகலா கொலைக்காரியா? கொள்ளைக்காரியா? அதிகாரப்பசி மிக்கவரா? அவர் முதலமைச்சர் ஆகலாமா? என்ற விவாதங்களுக்கு மத்தியில் தொடர்ச்சியாக சசிகலா ஆயாம்மா ,வேலைக்காரி இன்னும் நிறைய தரம் தாழ்ந்த விமர்சனங்கள். 5.30 மணிக்கு முதல்வர் கவர்னரை சந்திக்கிறார், 7.30க்கு சசிகலா கவர்னரை சந்திக்கிறார்  5.30 மணிக்கு முதல்வர் கவர்னரை சந்தித்து பேசி தேநீர் அருந்தினார், 7.30க்கு சசிகலா கவர்னர் மாளிகைக்கு சென்று தேநீர் கோப்பைகளை கழுவி வைத்தார் .இப்படி நாகரீக சமுதாயத்தில் பெண்களை அதுவும் பொது வாழ்வில் உள்ள பெண்களை விமர்சனம் செய்யும் போது தரம் தாழ்ந்து விமர்சிக்கக்  கூடாது. இதை சிலர் வக்கிர புத்தியுடன் உருவாக்கி பலர் பொழுதுபோக்காக பகிர்கிறார்கள் .

தமிழன் தரம் தாழ்ந்து விட்டானா ?

சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களை பன்றிகளுடனும் நாய்களுடனும் ஒப்பிட்டு meme, C .R.சரஸ்வதி, வளர்மதி ,கோகுல இந்திரா போன்றோரை குரங்குகளுடன் ஒப்பிட்டு விமர்சனங்கள் /meme .நாஞ்சில் சம்பத் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  நீ சொத்தை தான் தின்கிறாயா? என்று கேட்கிறார் ஒருவர்.

இதற்க்கு முன் சகோதரி தமிழிசை தலைமுடியையும் ,முதுபெரும் அரசியல் தலைவர்  கலைஞரை கட்டுமரம் என்றும் விமர்சனம் செய்து meme போட்டார்கள். தற்போது அதை எல்லாம் தாண்டி கதற கதற C .R .சரஸ்வதி ,கோகுல இந்திராவிற்கு ஆண்கள் அதிகம் உள்ள ரெசார்ட்டில் என்ன வேலை ,சசிகலா கால்களை கழுவி கொண்டிருக்கும் தம்பிதுரை, செங்கோட்டையன் meme, சின்னம்மா அம்மா மாதிரி கொண்டையை போட்டீங்க எப்ப அம்மா மாதிரி மண்டைய போடுவீங்க?இது எல்லாம் உதாரணம் தான். இன்னும் நிறைய இருக்கு.

நாம் நாகரீக சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .நாகரீக சமுதாயத்தின் விமர்சனங்கள் ,எண்ணங்கள் அனைத்தும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் மாண்புகளை காப்பதில் ஆளுநருக்கும் ,முதலமைச்சருக்கும் எவ்வளவு பொறுப்பு உள்ளதோ ,அதேபோல மக்களுக்கும் பங்கு உண்டு . ஜனநாயகத்தின் மாண்புகளை காப்போம்.

  

இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
Sumai244@gmail.com


இதில் மேலும் படிக்கவும் :