எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் பகுதிக்குள் செய்தியாளர்களுக்கு அனுமதி


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (19:52 IST)
தற்போது கூவத்தூர் நட்சத்திர விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுடன், பொதுச் செயலாளர் சசிகலா அலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். செய்தியாளர்களின் சாலை மறியல் போராட்டத்துக்கு பின் நட்சத்திர விடுதிக்குள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

 
கூவத்தூர் நட்சத்திர விடுதியில் அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கி உள்ளனர். அவ்வப்போது ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் மட்டும் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்து வந்தனர். முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
 
மேலும் செய்தியாளர்கள் எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் பகுதிக்குள் அனுமதிக்கப்படாத காரணத்தினால், சசிகலா எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்திருப்பது உறிதி என்பது போல் தகவல்கள் வெளியாகி வந்தது.
 
இந்நிலையில் தற்போது சசிகலா, அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் நடத்தும் அலோசனை கூட்டத்துக்கு செய்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் சசிகலா, இங்கு எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாகதான் உள்ளனர், என்று கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :