செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (12:01 IST)

அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கம்?

அதிமுகவின் அணிகள் இணைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.


 

 
அதிமுகவின் இரு அணிகள் இணைவது குறித்த பேச்சுவார்த்தை வெகு நாட்களாக நடந்து வந்த நிலையில் நேற்று மாலை முதலவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அணியினரின் கோரிக்கையை நிறைவேற்றினார்.
 
இருந்தும் ஓபிஎஸ் அணியில் இருக்கும் கே.பி.முனுசாமி ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது இரு அணிகளும் இணைவதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இரு அணிகள் இணைப்பு குறித்த செய்திகள் இன்று மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஓபிஎஸ் அணியின் முக்கியமான கோரிக்கை சசிகலாவை அதிமுகவில் நீக்க வேண்டும் என்பதுதான். ஒருவேளை இரு அணிகளும் இணைய முடிவு செய்துவிட்டால் அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.