Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாதான் எனக்கு அம்மா ; அவரே முதல்வர் - ஜெ. அண்ணன் மகன் தீபக்


Murugan| Last Modified புதன், 4 ஜனவரி 2017 (08:50 IST)
அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா என் தாய் போன்றவர், அவர்தான் முதல்வராக வரவேண்டும் என மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபக் பேட்டியளித்துள்ளார்.

 

 
சசிகலா முதல்வராக வேண்டும் என தம்பிதுரை போன்றவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். போயஸ் கார்டனில் நடக்கும் விவகாரங்களை பார்க்கும் போது அவர் விரைவில் முதல்வராக பதவியேற்பார் எனவும் தெரிகிறது.
 
இந்நிலையில் ஜெ.வின் அண்ணன் மகன் தீபக்கிடம், ஆங்கில செய்தி சேனல் ஒன்று தொலைபேசி வழியாக பேட்டி எடுத்தது. அப்போது அவர் கூறியதாவது:
 
சசிகலா என் தாய் போன்றவர்.  அவர்தான் முதல்வர் ஆகப் போகிறார். அவரை அடிக்கடி சந்திக்க நான் பேச வேண்டும் என்பதில்லை. அவர் முதல்வர் ஆவதை விரைவில் உறுதி செய்வோம்” என  கூறியுள்ளார்.
 
ஜெ.வை அடக்கம் செய்வதற்கு முன், சசிகலாவோடு சேர்ந்து அவர் ஈமச்சடங்குகளை செய்தார் தீபக். மேலும், சசிகலாவிற்கு எதிராக பேசி வரும் தீபாவிற்கு எதிராகவும் அவர் கருத்து தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :