சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மருத்துவமனையில் கை அசைத்த சசிகலா!

Papiksha Joseph| Last Modified வியாழன், 21 ஜனவரி 2021 (14:36 IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் அவர் வரும் 27 ஆம் தேதி தண்டனை முடிந்து விடுதலையாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தன.

இதனிடையே திடீரென நேற்று மாலை சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் அவருக்கு கொரோனா தொற்று
இருக்குமோ என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த சோதனையில் கொரோனா பாதிப்பில்லை என ரிசல்ட் வந்தது. சிறையிலிருந்து விடுதலை ஆக ஒருவாரம் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சற்றுமுன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மருத்துவமனையில் கை அசைத்த சசிகலாவின்
புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சிடி ஸ்கேன் எடுக்க வேறு மருத்துவமனைக்கு சசிகலா மாற்றம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்டது என தகவல்கள் கூறுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :