செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 15 ஜூலை 2017 (10:49 IST)

அதிகார பசியில் சசிகலா: விரைவில் கர்நாடக முதல்வரை சந்திக்க உள்ளார் இவர்!

அதிகார பசியில் சசிகலா: விரைவில் கர்நாடக முதல்வரை சந்திக்க உள்ளார் இவர்!

சசிகலா சிறையில் சிறப்பு வசதிகளை பெற 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா அறிக்கை வெளியிட்டுள்ளார்.


 
 
அவரது அறிக்கையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை கைதியாக உள்ளார். சிறை சென்ற பின்னரும் அதிகார பசியால் சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வாழ்க்கையை தேடி உள்ளார்.
 
இதனை கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா திவாகர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதற்கு பதிலளிக்க முடியாமல் சிறைத்துறை அதிகாரிகள் திணறி வருகிறார்கள். சிறை விதிகளை மீறி பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக அந்த சிறையில் இருக்கும் கைதி மஞ்சுனாத் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
 
சிறை டிஜிபி சத்திய நாராயணராவ் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் வெளிப்படையாக மத்திய அரசு உடனடியாக மத்திய புலனாய்வு துறையை விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். சிறைத்துறை நடவடிக்கை சம்பந்தமாக கர்நாடக முதல்வரை தேவைப்படும் பொழுது நேரில் சந்திக்க உள்ளேன் என கூறியுள்ளார்.