Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மௌனம் கலைத்த சசிகலா: முதன் முதலாக ஊடகத்திற்கு பேட்டி!

மௌனம் கலைத்த சசிகலா: முதன் முதலாக ஊடகத்திற்கு பேட்டி!


Caston| Last Updated: புதன், 28 டிசம்பர் 2016 (11:20 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தான் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக வர இருக்கிறார் என தகவல்கள் வருகின்றன. ஆனால் கட்சியில் சில எதிர்ப்புகளும் அவருக்கு கிளம்புகின்றன.

 
 
இந்நிலையில் சசிகலா பேசியே இதுவரை யாரும் கேட்டதில்லை. ஏன் அதிமுகவினரே சசிகலாவின் பேச்சை கேட்டதில்லை. அவர் எப்படி பேசுவார், அவரது குரல் எப்படி இருக்கும். ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க தெரியுமா, என எதுவுமே தெரியாது.
 
இந்நிலையில் சசிகலாவின் பேட்டியை எப்படியாவது வாங்க வேண்டும் என ஊடகங்கள் போட்டி போடுகின்றன. ஆனால் சசிகலா முதன் முதலாக ஒரு ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
 
பிரவோக் என்னும் ஆங்கில இதழுக்கு முதன் முதலாக சசிகலா பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டி வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது என பிரவோக் இதழின் ஆசிரியர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பேட்டியில் சசிகலா குறித்து உலா வரும் பல சர்ச்சைகளுக்கு பதில் அளித்து அதற்கு முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பிரவோக் என்னும் இந்த இதழின் ஆசிரியர் அப்சரா ரெட்டி ஒரு திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஜெயலலிதா மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர்.


இதில் மேலும் படிக்கவும் :