சசிகலாவின் முதல் பேட்டி விரைவில்: ஜெ.வுடன் வாழ்ந்த காலம்


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 27 டிசம்பர் 2016 (17:15 IST)
சசிகலாவின் முதல் பேட்டியை ஃப்ரோவோக் லைப்ஸ்டைல் என்ற ஆங்கில இதழ் வரும் ஜனவரி மாதம் 2017ஆம் ஆண்டு வெளியாகும் இதழில் வெளியிட உள்ளது.

 

 
ஃப்ரோவோக் லைப்ஸ்டைல் என்ற ஆங்கில இதழ் சென்னையில் இயங்கிக்கொண்டிருக்கும் இதழ். இந்த இதழில் அதிகாரத்தில் உள்ள பெண்கள் மற்றும் பிரபலமான பெண்கள் குறித்து கட்டுரை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக நிர்வாகிகளால் சின்னம்மா என்று அழைக்கப்படும் சசிகலாவின் பேட்டியை வரும் ஜனவரி மாதம் 2017ஆம் ஆண்டு வெளியிட உள்ளனர்.
 
இதுவே சசிகலாவின் முதல் பேட்டி. இதற்கான அட்டடைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சின்னம்மா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் சசிகலா முதன்முதலாக ஜெயலலிதாவுடன் இருந்த வாழ்க்கை, சோதனைகள் மற்றும் துயரம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இது சசிகலாவின் முதல் பேட்டி என்பதால் அனைவரிடமும் இது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :