Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அப்பல்லோவில் நடராஜன்: கவலையில் சசிகலா

bala| Last Updated: வியாழன், 9 மார்ச் 2017 (17:15 IST)
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் சசிகலா,இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் வெள்ளை நிற சேலையை அணிந்திருந்தனர். இந்த நிலையில் சசிகலா கணவர் நடராஜன் கல்லீரல் பாதிப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த மாதம் இதே பிரச்னை காரணமாக அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சசிகலாவுக்கு ஆதரவாக டெல்லியில் எடுத்த முயற்சிகளின் தோல்விகள் ஆகியவற்றால் மிகவும் மனகவலையில் இருந்தார். இந்த சூழ்நிலையில் அவருக்கு கல்லீரல் பிரச்னை மீண்டும் அதிகரித்ததை அடுத்து அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.இதனை அறிந்த சசிகலா மிகவும் கவலை அடைந்ததாக கூறப்படுகிறது. தான் அணிந்துள்ள வெள்ளை நிற சேலையால் ஏற்படும் தோசத்தால்தான் கணவருக்கு உடல்நலம் குன்றுவதாக நினைத்தாராம். இதையடுத்து தனது ஆஸ்தான ஜோதிடரிடம் கொல்லி சிகப்பு நிற சேலைகளை வரவழைத்து, அதனை சிறைத்துறை அதிகாரிகள் அனுமதியுடன் உடுத்தி வருவதாக கூறப்படுகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :