ஜேம்ஸ் பாண்ட் சசிகலா; ஜெ. உயிருக்கு போராடும் போது ஆட்டம் போட்ட மன்னார்குடி குரூப்ஸ்: நேரில் பார்த்த சாட்சி!

ஜேம்ஸ் பாண்ட் சசிகலா; ஜெ. உயிருக்கு போராடும் போது ஆட்டம் போட்ட மன்னார்குடி குரூப்ஸ்: நேரில் பார்த்த சாட்சி!


Caston| Last Updated: செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:05 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் டிசம்பர் 5-ஆம் தேதி உயிருக்கு போராடும் போது சசிகலா தரப்பினர் கொஞ்சம் கூட முகத்தில் வருத்தம் இல்லாமல் மருத்துவமனையில் சசிகலா தலைமையில் அணிவகுப்பு நடத்தியதாக நேரில் பார்த்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார்.

 
 
தமிழக முதல்வராக சசிகலா அவசர அவசரமாக பதவியேற்க உள்ள நிலையில் இதனை எதிர்த்து அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சசிகலா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார் அவர்.
 
டிசம்பர் 5-ஆம் தேதி இரவு ஜெயலலிதா உயிருக்கு போராடியபோது சசிகலாவும் அவரது உறவினர்களும் துளிகூட கண்ணீர் விடவில்லை என அதனை தான் நேரில் பார்த்ததாக கூறினார் பி.எச்.பாண்டியன்.
 
மேலும் சசிகலா ஜேம்ஸ் பாண்ட் கோட் அணிந்து கொண்டு அவரை சுற்றி அவரது குடும்பத்தினர் வரிசையாக அணிவகுப்பு நடத்தினர். அவர்கள் அணிவகுப்பு நடத்திய விதம் இனி அதிமுகவும், ஆட்சியும் தங்களுக்கு தான் என்ற தோரணையில் இருந்தது என பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :